நத்தாரைக் கொண்டாட பணம் இல்லாததால் குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நேற்றிரவு 11 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ள நிலையில் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான இவர் மேசன் தொழில் செய்து வந்துள்ள நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டடத்தொழில் இல்லாமல் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.
இந்நிலையில் பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாத நிலை மற்றும் மனைவியின் நச்சரிப்பு போன்ற காரணங்களால் மனக்கவலையடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச் சாட்டில் குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.