நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Date:

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

நேற்று (04) இரவு டுபாயில் இருந்து இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி காலநிலை நீதி மன்றத்திற்கான முன்மொழிவை முன்வைத்ததுடன், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழக திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக நாடுகளில் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுதுடன், இலங்கையில் நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இங்கு ஜனாதிபதி விளக்கினார்.

 

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...