தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை சிறுமி கில்மிஷா நாடு திரும்பியுள்ளார்.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார்.
இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.
இலங்கையிலிருந்து தென்னிந்திய இசைப் போட்டிகளில் இலங்கையில் இருந்து பங்கு பற்றுகின்ற நிலையில், முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளமை என்பது இதுவே முதல் முறையாகும்.