நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சாரம், பல பகுதிகளுக்கு வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
லக்ஷபான, சமனலவெவ மற்றும் கொத்மலை மின் நிலையங்கள் மீண்டும் சேவையில் இணையத் தொடங்கியுள்ளன.
அதன்படி மேல் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் சில பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளுக்கு விரைவில் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.