மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்விப் பிரிவில் ஐந்து தேசிய பாடசாலைகள் உட்பட 22 பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பிரிவினால் செலுத்த வேண்டிய போதிலும், மாத்தறை வலயக் கல்விப் பிரிவு நிதிப் பற்றாக்குறையினால் கட்டணம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களை பாடசாலை மின்கட்டணத்தை செலுத்த வைக்கும் அரசின் ஒருவித சதியாகவே இதை பார்க்கிறோம். மின்வெட்டால் பாடசாலைகளின் அனைத்து நடவடிக்கைகளும் தாமதமாகும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.
மின் கட்டணத்தைச் செலுத்தாத கிராம அளவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மின் இணைப்பைத் துண்டிக்கத் தொடங்கியது. அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது சொந்த கிராமத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
மின்சார கட்டணத்தை செலுத்தாத 800,000 நுகர்வோரின் மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாத்தறையில் இருந்து மின்கட்டணத்தை செலுத்த தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.