ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் திகதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து நாடு முழுக்க பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் முக்கிய பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுக்க இருக்கும் முக்கிய கோயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், முக்கிய சாலைகளிலும் தொடர்ச்சியாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.