போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற மத வழிபாடு ஒன்றின் போது முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சட்டின் கீழ் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று முன்தினம் (29) காலை இலங்கைக்கு வருகைத்தந்தார்.
பேராயர் முன்வைத்த மனுவின் பிரகாரம், போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.