பௌத்த யாத்திரைகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்!

Date:

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் தமக்கு வழங்கிய சிறந்த ஒத்துழைப்புக்காக பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இதன்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பௌத்த யாத்ரீகர்களின் பாகிஸ்தானுக்கான விஜயங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் விளக்கினார்.

இலங்கையர்களுக்கு பௌத்த யாத்திரை தலங்களை திறக்கும் பாகிஸ்தானின் முன்மொழிவுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், கடந்த ஆண்டு பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாதுகாக்கப்பட்ட பௌத்த பாரம்பரியங்களை பார்வையிடுவதற்காக ஒரு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்ததற்காக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு நன்றியும் கூறினார்.

அவ்வாறானதொரு சுற்றுலா அடுத்த ஆண்டு முன் அரைப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும் ஏனைய சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வரும் பாகிஸ்தானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாகிஸ்தான் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமைக்காக பாகிஸ்தான் தூதுவருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு பாகிஸ்தான் தொழில் முயற்சியாளர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதுடன், முதலீட்டாளர்களின் கவனத்திற்கு இதணை கொண்டு செல்வதாக உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...