முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

Date:

2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை முட்டை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் 35 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்வதாகவும் அவர் கூறினார்.

சந்தையில் அசாதாரணமான முறையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளை நத்தார் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணான்டோ கூறினார்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...