ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்களாக 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தமது கட்சியில் நான்கு வேட்பாளர்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் குறித்த நால்வரில் வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் அடங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.