அரசாங்கம் வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிப்பதன் ஊடாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் விலையும் 50 முதல் 60 வீதம் வரை அதிகரிக்கும் என இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவர் டானியா அபேசுந்தர மேலும் கூறியதாவது,
‘‘அரசாங்கம் வணிகர்களிடம் வரியை வசூலிக்க முறையான திட்டங்களை வகுக்க வேண்டும். வணிகர்களை ஊக்குவிப்பதன் ஊடாகவே நிலையான வரி வருமானத்தை வசூலிப்பதற்கான முறைமைகளை உருவாக்க முடியும்.
கடுமையான நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் வணிகர்களுக்கு வரி விதிக்க முயற்சித்தால், அவர்கள் எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவை வழங்க முடியும்.
வற் வரி அதிகரிப்பால் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நுகர்வோருக்கு போட்டி விலையில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.‘‘ என்றார்.