விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளுக்குச் சென்ற 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

Date:

புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் உறவினர்களை சந்திக்கவும், குழந்தைகளின் கல்வியை கவனிக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வெளிநாடு சென்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன் நாடு திரும்ப உள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவிலுள்ள சென்பதி நிவேசா பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கு விடுதியின் அறைகள் இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை முழுமையாக பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் நூறு எம்.பி.க்கள் தங்கு விடுதியை முன்பதிவு செய்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு கடந்த 13ஆம் திகதி நடைபெற்றதையடுத்து, சபாநாயகர் பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இதனால் எம்.பி.க்கள் அனைவருக்கும் ஒரு மாதம் வரை விடுமுறை கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...