வெள்ள நீரில் தத்தளிக்கும் சென்னை: போர்க்கால நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள்

Date:

இந்தியாவில் சென்னை மாநகரை மிக்ஜாம் புயல்  தாக்கிய நிலையில், எங்கு பார்த்தாலும் வெள்ள நீராக சூழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போது  மழை குறைந்துவிட்ட நிலையில் மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே முடக்கிப் போட்டது மிக்ஜாம் புயல். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை கடந்துவிட்டபோது நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்றும், தற்போதில் இருந்தே மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்கு வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தக்கூடிய சாதகமாண சூழல்கள் இல்லை என்றும் மழை பெய்வதவற்கான சூழல் மிக குறைவாகத்தான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது இந்த புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 130 கி.மீ தொலைவில் நிலைகொண்டு இருப்பதாகவும், ஆந்திராவின் நெல்லூரை புயல் நெருங்கி கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.

12 கிமீ வேகத்தில் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல், நாளை முற்பகல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும். ஆந்திரா நெல்லூர் தென்கிழக்கில் 50 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது என்றும் இனி சென்னையில் மழை குறைந்துவிடும் என்றும் தெரிவித்து இருந்தது. வானிலை மையம் அறிவித்தப்படியே நள்ளிரவில் சென்னையில் மழை குறைய தொடங்கியது.

இந்த நிலையில், சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

இதேவேளை  தமிழக அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...