08 மாத குழந்தையுடன் புகையிரதம் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாய் : பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Date:

முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது எட்டு மாத மகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தாயை காவல்துறை விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

அஹுங்கல்ல வெலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் இவர் முறைகேடான உறவில் இருந்துள்ளார், அந்த முன்னாள் பொலிஸ் அதிகாரி இவர் தன்னுடன் இருந்த பொழுதுகளை காணொளியாக எடுத்துள்ளார். இவ்வாறு எடுத்த காணொளிகளை அவரது கணவனுக்கு அனுப்பி வைப்பதாக மிரட்டி, பணம் பறித்துள்ளார்.

இதன்படி இதுவரை சுமார் நான்கு இலட்சத்தை பெற்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை (28) மதியம் அவர் அறுபதாயிரம் ரூபாவை கேட்டதாகவும் அதனை கொடுக்க முடியாத நிலையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் எட்டு மாதக் குழந்தையுடன் புகையிரதம் முன் குதிக்க முயற்சித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

பெண்ணுடன் முறைசாரா உறவைப் பேணி அவருடன் அறையில் கழித்த தருணங்களை பதிவு செய்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஹுங்கல்ல பொலிசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...