மாணவர்களுக்கான விவாதப் போட்டி, அறபு எழுத்தணிப் போட்டி, அதான் சொல்லல் போட்டி, அறபு வாசிப்புப் போட்டி, நாடகப் போட்டி, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, மாணவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறந்த வாசகரைத் தெரிவு செய்யும் போட்டி, சிறுவர் ஆக்கத்திறன், கலைத்திறனை வெளிக்கொணரும் கண்காட்சி, கட்டுரைப் போட்டி, அறிவுக்களஞ்சிய போட்டி, 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பாடல் போட்டி, சிங்கள வாசிப்பு போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புப் போட்டி, சிறந்த வீட்டு நூலகம் என பல நிகழ்வுகளை சிறப்புடன் நடாத்தியிருந்தார்கள்.
2022 தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுக்காக காத்தான்குடி நகர சபைக்கு 2ஆவது இடம்!
Date:

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2022 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் நகர சபைகளிற்கான பிரிவில் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களாக காத்தான்குடி பொது நூலகத்தினால் ஏகப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மாணவர்களை நூலகத்துடன் இணைக்கும் பாரிய பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக பெரிதும் பாடுபட்டவர் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ரிப்கா ரபீக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் பிரதேச சபை மட்டத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளது.