அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகளை பெப்ரவரி 22, 2024 அன்று உத்தியோகபூர்வமாக தொடங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அன்றைய தினம் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சு சுற்றறிக்கை மூலம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வகுப்புகளை சம்பிரதாயமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களை தெரிவு செய்யும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.