நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திலே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவைச் சேர்ந்த 109 சந்தேக நபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 14 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 184 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஒரு கிலோகிராம் ஹீரோயின் மற்றும் 19,507 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளன.