7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதன்படி பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் சூறாவளி, இன்று இந்தியாவின் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடற்பகுதிகளில் 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...