ACTJ மீண்டும் சூறா கவுன்சிலில் இணைவு!

Date:

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட வேட்டையாடல்களின் போது தடை செய்யப்பட்டிருந்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், தற்பொழுது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேசிய சூறா கவுன்சிலில் மீளவும் இணைந்து கொண்டது.

தேசிய சூறா கவுன்சிலுக்கும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தேசிய சூறாவின் அங்கத்துவ அமைப்பான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தேசிய சூறா கவுன்சிலின் தலைவர் சட்டத்தரணி ட்டீ. க்கே. அஸூர், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் அஷ். யூனுஸ் தப்ரீஸ் ஆகியோருடன் இருதரப்பிலிருந்தும் பல அங்கத்தவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...