தேசிய கண் வைத்தியசாலையில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இவ்வாறு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தேசிய கண் வைத்தியசாலையில் இன்றைய தினம் (14) அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.