‘ZEE’ தொலைக்காட்சியில் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய இலங்கை கில்மிஷா

Date:

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் இலங்கை கில்மிஷா வெற்றி பெற்ற தருணத்தின் காணொளியை ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

“சரிகமபா” இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் ஒருவரான கில்மிசா வெற்றிப்பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிகழ்ச்சியானது நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெற்றது.

இறுதிச்சுற்றில் முதலாவது இடத்தினை கில்மிஷவும், இரண்டாவது இடத்தினை சஞ்சனாவும், மூன்றாவது இடத்தினை ரிக்ஷிதாவும் பிடித்திருந்தனர்.

மேலும், வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பத்து இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...