அறநெறி/அஹதியா பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!

Date:

அறநெறி மற்றும் அஹதியா பாடசாலைகளின் இறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் 669 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான மாணவர்களின் அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே தபால் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்து இதுவரை அனுமதி பெறாத மாணவர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து அறநெறி பாடசாலை அதிபர்களுக்கு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://apps.exams.gov.lk/principals/admissions மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...