ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன், மத்ரஸாவில் உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா நல்லடக்கம்

Date:

அம்பாறை – சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் ஜனாஸா நேற்று(07) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதில் மத்ரஸா ஒன்றில் பயின்று வந்த காத்தான்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன், 5ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சிறுவனின் உயிரிழப்பையடுத்து, பொதுமக்கள் மத்ரஸாவை சுற்றிவளைத்தனர்.

இதனால் மத்ரஸாவின் நிர்வாகியை பொலிஸார் அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அவர் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார்.

சிறுவனின் பிரேதப் பரிசோதனை அம்பாறை பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, ஜனாஸா பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதே பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...