இந்திய நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் வீசியதால் பரபரப்பு: எம்.பிக்கள் அலறி அடித்து ஓட்டம்!

Date:

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் திடீரென நுழைய முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் கண்ணீர் புகை வீசப்பட்டதால் எம்.பிக்கள் சிலர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென குதித்த 2 பேர், இருக்கைகளின் மீது ஏறி சபாநாயகர் மாடத்தை நோக்கி ஓட முயற்சித்தனர்.

கண்ணீர் புகை குப்பிகளை வீசினர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்த காவலர்கள் கைது செய்தனர்.

அதேபோல் நாடாளுமன்றத்தின் வளாகத்திலும் கண்ணீர் புகை குப்பிகளை வீசிய இருவரை காவலர்கள் கைது செய்தனர்.  2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருவரையும் பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க எம்பி ஒருவரின் பரிந்துரை கடிதத்தின் பெயரிலேயே இந்த நபர்கள் பார்வையாளர்கள் மாடத்துக்கு அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...