இஸ்ரேலின் முக்கிய துறையான கட்ட நிர்மாணத் துறைக்கு, இலங்கை தொழிலாளர்களை வரவழைக்க திட்டம்

Date:

இஸ்ரேல் தனது கட்டுமான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க திட்டமிட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கடும் போர் நீடித்து வருகிறது. அதன் காரணமாக இஸ்ரேலில் வேலை செய்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய துறையான கட்ட நிர்மாணத் துறையில், போர் ஆரம்பமாகும் முன்னர் சுமார் 82 ஆயிரம் பலஸ்தீனர்கள் தொழில் புரிந்து வந்தனர்.

தற்போது, அவர்கள் மாத்திரமின்றி சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்களும் இஸ்ரேலை விட்டு வெளியேறி சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, இஸ்ரேல் முழுவதும் நிர்மாணப்பணிகள் முழுமையாக நடைபெறாததால் அந்நாட்டின் பொருளாதாரத்தை கணிசமாகப் பாதித்துள்ளது.

அத்துடன், ஹமாஸை எதிர்த்துப் போரிட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இஸ்ரேலின் இராணுவத்துடன் இணைந்துள்ளதால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேலின் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாகி உள்ளது.

நாட்டின் ஆகப்பெரிய பொருளியல் துறைகளில் ஒன்றான நிர்மாணத்துறையின் 2022ஆம் ஆண்டுக்கான சந்தை மதிப்பு 71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இஸ்ரேல் நிர்மாணத்துறை சங்கம் மதிப்பிட்டுள்ளது.

போருக்கு முன்னர் நடைபெற்ற நிர்மாணப் பணிகளில் 15 வீதம் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன.

எனவே, அந்தத் துறையை மீட்டெடுக்கபுதிய வெளிநாட்டு தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டிய கட்டாயம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு உள்ளது.

அதன் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் நிர்மாண சங்கத்தின் பிரதிநிதிகள் அடுத்த சில தினங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்து, பல்வேறு கட்டுமானப்பணிகளில் வேலை செய்ய தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் இனியும் காலம் தாழ்த்த முடியாது எனவும் இதனால்,வெகு விரைவில் 10 ஆயிரம் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாகவும் சங்கத்தின் துணைத் தலைமை பணிப்பாளர் ஷாய் பாஸ்னர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...