உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அரச அதிகாரிகளுக்கு சலுகைகள்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட  அரச அதிகாரிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023 உள்ளூராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார் நாயகம் அவர்களால பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உடன்பாடு கிடைத்துள்ளது.

அந்த குழுவின் பரிந்துரைகளை அடிப்படையில் பின்வரும் வகையில் செயற்படுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(i) தேர்தலில் போட்டியிடும் அதிகார எல்லையிலிருந்து வெளியேயுள்ள சேவை நிலையத்துக்கு இடமாற்றம் செய்தமையால், சிரமத்துக்குள்ளான அரசியல் உரிமை கொண்ட அலுவலர் ஒருவர் அது தொடர்பாக மேன்முறையீடு செய்யப்படின், நிறுவன தலைவர் அவர்கள் அது தொடர்பாகக் கவனம் செலுத்தி குறித்த சேவை நிலையத்தில் அரசியல் கருமங்களிலோ அல்லது அரசியல் பரப்புரைகளில் ஈடுபடாமல் பணியாற்றுவதாக குறித்த அலுவலரிடமிருந்து சத்தியக் கடதாசியொன்று பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அலுவலரின் நிரந்தர சேவை நிலையத்திற்கு கடமைக்கு செல்வதற்கு இடமளித்தல்.

(ii) 2023-04-25 திகதி தொடக்கம் 2023-04-08 ஆம் திகதி வரையான காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருதி அடிப்படை சம்பளம் வழங்குதல்.”

(iii)2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக வேட்புமனு நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அலுவலர்கள் 2023-05-08 திகதிய 07/2023 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய கட்டாயமாகக் கடமைக்கு சமூகமளிக்குமாறு பணித்தல்.

(iஎ)அதற்கமைய, அரசியல் உரிமை கொண்ட அரச அலுவலர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்குறித்த விடயங்கள் அடங்கலாக பொது நிர்வாக சுற்றறிக்கையை வெளியிடுதல்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...