17ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டுபாயில் நடந்து வருகிறது.
அவுஸ்ரேலிய அணியின் தலைவர் பட் கம்மின்ஸை் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20.50 கோடிக்கு (இந்திய ரூபாய்) ஏலம் எடுத்துள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனைக்கு பட் கம்மின்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே இதுவரை சாதனையாக இருந்துவந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.