குவைத் மன்னர் இறப்புக்கு ரிஷாத் அனுதாபம்!

Date:

குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் உள்ள குவைத் தூதரகத்துக்கு சென்ற ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான குவைத் நாட்டின் பொறுப்பதிகாரி உஸ்மான் அல்-உமர் சந்தித்து தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில், “மிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன். அவரது ஆட்சிக் காலத்தில் குவைத் மக்களுக்கு மகத்தான சேவையை ஆற்றியவர்.

அவரின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தில் குவைத்தின் நீண்டகால நண்பர்களான இலங்கையர்களாகிய நாங்களும் பங்கேற்கின்றோம்.

அத்துடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அமீர் அவர்களின் சேவைகளைப் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் உயர்ந்த இடத்தை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்“ என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...