சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மத்ரஸாவில் மரணமான சிறுவனின் ஜனாஸா தொடர்பாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளயதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
அதேநேரம் இத்தருணத்தில் குறித்த சிறுவனுடைய குடும்பத்தினருக்கு ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அத்துடன் குறித்த சிறுவனின் மறுமை வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தையும் நற்பாக்கியங்களையும் அல்லாஹு தஆலா வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தினருக்கு பொறுமையையும் ஆறுதலையும் வழங்கவேண்டுமெனவும் துஆச் செய்கின்றது.
மேலும் குறித்த மரணம் தொடர்பில் பூரண விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான தெளிவுகள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.