சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மரணம் கொலை என உறுதி!

Date:

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்ட மத்ரசா மாணவனின் மரணமானது ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (5) மாலை நேரம் சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் உயிரிழந்த காத்தான்குடி மாணவனின் மரண விசாரணை இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த மரணமானது ஒரு “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மத்ரஸா அதிபர் (மெளலவி) சஹ்னாஸ் என்பவரால் தாக்குதலுக்கு உள்ளாகியே குறித்த 13 வயது மாணவன் உயிரிழந்திருக்கக்கூடுமென மக்கள் மத்தியில் நிலவி வந்த சந்தேகம் இப்போது “கொலை” என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தையடுத்து இன்று (07) நடைபெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் இம் மாணவனின் மரணம் “கொலை” என சட்ட வைத்திய அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( மூலம் -Rifthi ali)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...