ஜனவரி முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் வட் வரி அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் ஒரு சாதாரண பேருந்தின் கொள்வனவு சுமார் ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் என்று குறிப்பிட்ட அவர், அந்த விலைக்கு பேருந்தை வாங்கி சாதாரண மக்களை ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது.

இது தவிர,  வரி திருத்தத்தின் மூலம் பேருந்து உதிரிபாகங்களின் விலை, எண்ணெய் விலை, எரிபொருள் விலை, சேவைக் கட்டணம் போன்ற அனைத்தும் உயரும்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...