தேசிய கண் வைத்தியசாலையில் இன்றைய தினம் (14) அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, தேசிய கண் வைத்தியசாலையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.