நாட்டில் 10 வீதமான ஆண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்

Date:

நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“2022 ஆம் ஆண்டு குடும்ப சுகாதார பணியகத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.

இவ்வாறு அதிகமான பெண்களே வருகின்றார்கள். எமது தரவுகளின்படி 90 வீதமான பெண்களும் 10 வீதமான ஆண்களும் எமது நிலையத்திற்கு வருகின்றார்கள்.

உடல் ரீதியான துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், பொருளாதார துஸ்பிரயோகம், உளவியல் துஸ்பிரயோகம் என பல்வேறு துஸ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றார்கள்.

இவ்வாறு வீடுகளில் துஸ்பிரேகத்திற்குள்ளாகுபவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப சுகாதார பணியகத்திற்கு சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம் 070 2 611 111 எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கலாம். அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த நிலையங்கள் காணப்படுகின்றன.

நாடளாவிய ரீதியிலும் அனைத்து விசேட நிபுணத்தவ வைத்தியசாலைகளிலும் இந்த நிலையம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...