மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!

Date:

மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை பதிவிடுவோருக்கு எதிராக முறைபாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

0112300637, என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவும் 0112381045 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ccid.religious@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை அளிக்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...