மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் விளக்கம்

Date:

5 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டமை தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைக்கு இலங்கை மின்சார சபை விளக்கம் அளித்துள்ளது.

கொவிட் காலத்துக்குக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது துண்டிப்பு விகிதம் அசாதாரணமானது அல்ல என சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபை, இவ்வருடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இயல்பானவை என உறுதியளித்துள்ளது.

மின்சாரப் பாவனையின் ஒரு மாதத்திற்குப் பின்னரே மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் பெரும்பாலான நுகர்வோர்கள் உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

வழமையாக ஒரு மாதத்திற்குப் பின்னரே சிவப்பு அறிவிப்பு வழங்கப்படும் என தெரிவித்த இலங்கை மின்சார சபை  சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னர் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 544,488 மின் இணைப்புகள் துண்டிப்புகள் மற்றும் மின் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...