லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் ஞாயிறு 2023 டிசம்பர் 03 ஆம் திகதி கொலன்னாவ நாஸ் கலாசார மையத்தின் கேட்போர்கூடத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். ஸரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரெய்ன்கோ நிறுவனத்தின் தலைவரும் நாடறிந்த சமூக சேவையாளருமான அல்.ஹாஜ் எஸ்.எல்.எம். பௌஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்தக் கற்கை நெறியின் முதலாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நாஸ் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் நஜ்மான் ஸஹீட், சிகாமணி அமீனா முஸ்தபா உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
உத்தரவாத கம்பணியாக பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்ற ஒரு சமூக சேவை நிறுவனமான லைப்பாண்ட் நிறுவனம் நாடளாவிய ரீதியில் பல சமூக வேலைத் திட்டங்களை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.