இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் 2 மாதங்கள் முடிவடைந்தது.
இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வாரைப் பிடிக்கப் போவது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்தார்.
மேலும், ஹமாஸ் தலைவர் இருப்பதாக நம்பப்படும் காசாவின் தெற்குப்பகுதிகளைச் சுற்றி இஸ்ரேலின் படை வளைத்து விட்டதாகத் தெரிவித்த பெஞ்சமின், தற்போது அவர்கள் சின்வாரின் வீட்டைச் சுற்றி வளைத்திருப்பதாகவும் கூறினார்.
அங்கிருந்து அவர் எளிதாகத் தப்பி ஓடிவிடுவார் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் விரைவில் அவரைப் பிடிக்கப்போவது உறுதி எனச் சூளுரைத்தார்.