அகில இலங்கை காழி போரத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் இப்ஹாம் யஹ்யா அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கௌரவிப்பு நிகழ்வு பலாங்கொடை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பலாங்கொடை பள்ளிகள் பரிபாலன சபையின் தலைவர் அல்ஹாஜ் நஜ்புதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.