அயோத்தி கோவில் திறப்பு விழாவின் எதிரொலி: தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி

Date:

உத்தரபிரதேசம் புலந்த்சாகர் நகரிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில்  புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அதன்படி பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

முதல் பிரச்சார கூட்டத்திற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததுடன், இலட்சக்கணக்கான தொண்டர்கள் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வழக்கமாக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அல்லது உத்தரபிரதேச மாநிலம் தனது வாரணாசி தொகுதியில் பிரசாரத்தை தொடங்குவார். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் நகரில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

புலந்த்சாகர் நகரில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி ரூ.19,100 கோடிக்கான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் பெயரில் மிகப்பெரிய வைத்தியசாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் மோடியை தேர்ந்தெடுங்கள் என்ற கருப்பொருளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், பயன் அடைந்த மக்கள் குறித்த காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. சந்திரயான், ராமர் கோவில், நலத்திட்டங்கள் போன்றவையும் குறிப்பிட்டு பா.ஜனதா வீடியோ மூலம் பிரசாரம் மேற்கொண்டு உள்ளது. பிரதமர் மோடி கனவை மட்டும் விதைப்பவர் அல்ல. செயல் வீரராக திகழ்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...