அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்- குவிந்த தலைவர்கள்!

Date:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு பக்தர்களின் வருகையால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது

. அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே நேரத்தில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் எல்.இ.டி திரை அமைத்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

PVR INOX திரையரங்குகளில் இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் திரையிடப்படுகிறது.

நாடு முழுவதும் ஏராளமான நகரங்களில் உள்ள 160க்கும் அதிகமான pvr inox திரையரங்கங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ராமர் கோவில் குடமுழுக்கு ஒளிபரப்புக்கு தடை விதித்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜக மனுத் தாக்கல் செய்தது; இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு பதில் தர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில், தமிழ்நாட்டு கோவில்களில் எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை என விளக்கம் தரப்பட்டது.

நேற்று மாலை தொடங்கி இரவு வரை அயோத்தி ராமர் கோவில் சுற்றியுள்ள வெவ்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் கலைக்கட்டியது.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...