அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்த அறிவித்தல்!

Date:

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…..

“அஸ்வெசும திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை எங்களால் 1,410,000 பேருக்கு பணம் செலுத்த முடிந்துள்ளது. அதிக பணவீக்கத்தைக் கொண்டிருந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் அந்தக் கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்காலத்தில், அதில் காணப்படும் பலவீனங்களை தவிர்த்து, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அஸ்வெசுமவிற்காக விண்ணப்பங்களை கோர எதிர்ப்பார்த்துள்ளோம்.
இதன்போது ஒருபுறம் பொருளாதாரம் மீண்டு வரும். மேலும், சீர்திருத்த செயல்பாட்டினுள் பாதிக்கப்படும் மக்கள் குழு உள்ளது. குறுகிய காலத்தில் அவர்களை பாதுகாக்கும் வகையில் அஸ்வெசும செயற்படுத்தப்படுகிறது என்றார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...