இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட ஜம்இய்யாவின் பிரதிநிதிதிகளுடன் சந்திப்பு!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகருமான அசோக மிலிந்த மொறகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிதிகளுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை இன்று (09)  மேற்கொண்டார்.
 ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதன்போது நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன், உப செயலாளர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...