கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி சென்டர் நடாத்தி வருகின்ற தாருல் இக்மா குர்ஆன் மற்றும் ஹிப்ழ் பகுதிநேர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜும்ஆப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர்கள், அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர், கிராம உத்தியோகத்தர் உட்பட பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதேவேளை இந்நிகழ்வில் அப்பகுதியிலுள்ள சிங்கள மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.