இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் IIT Madras!

Date:

இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது.

வெளிநாடுகளில் IIT யின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு இருக்கும். புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி தமது கல்வியாளர்கள் குழுவை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் ஐஐடி இலங்கை வரவுள்ளது. இதற்கு முன்னர் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.

இலங்கை விஜயத்தில் ஐஐடி குழுபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (யுஜிசி) அதன் பாடநெறிகள் குறித்து விளக்கமளிக்கும். அதன் பின்னர் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...