இலங்கை சுகாதாரத் துறையின் பணிகளுக்கு AI தொழில்நுட்பம்!

Date:

இலங்கை சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு இப்போது நிஜமாகியுள்ளது. அதை புறக்கணிக்க முடியாது, செயற்கை நுண்ணறிவு சுகாதார துறை மற்றும் மருத்துவ கல்விக்கு பல நன்மைகளை கொண்டுள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்

மேலும் மருத்துவத்தின் தரத்தை அதிகரிக்க, சுகாதார சேவைகளின் செயல்திறன் மற்றும் தரத்தை அதிகரிக்க, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் தகவல்களின் அளவு மிக வேகமாக அதிகரித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் பற்றிய அறிவைப் பெறுவது ஒரு தனி நபருக்கு கடினமாக உள்ளது.

அத்தகைய சூழ்நிலையில் செயற்கை நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலங்கையில் சுகாதார சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளில் பயன்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள். இதுபோன்ற சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவின் பலன் மிகப் பெரியது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க செயற்கை நுண்ணறிவின் கீழ் நாங்கள் சேவைகளை வழங்க முடியும் – என்றார்.

மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருக்கிறது.

உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உலகளாவிய வளர்ச்சியை அதிகரிக்கவும் மற்றும் உலகம் முழுவதும் வருமானத்தை உயர்த்தவும் கூடிய தொழில்நுட்ப புரட்சியின் விளிம்பில் நாம் இருக்கிறோம்.

இந் நிலையில் செயற்கை நுண்ணறிவின் விரைவான முன்னேற்றம் உலகைக் கவர்ந்துள்ளது, இது உற்சாகத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புகளில் 60 சதவீத பாதிப்பினை ஏற்படுத்தும் என்று அண்மையில் எச்சரித்துள்ளது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...