உச்சம் தொட்ட தேங்காய் விலை: மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது

Date:

இலங்கையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை அதிகரித்து வருவதாக தெங்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

”தென்னை அபிவிருத்திச் சபையின் கூற்றுப்படி, ஆண்டு முழுவதும் சுமார் 1500 மி.மீ மழைவீழ்ச்சியும், சுமார் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தென்னை அறுவடைக்கு தேவை.

ஆனால், கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் காணப்பட்டது. மோசமான வானிலையால் தென்னை அறுவடை குறைந்துள்ளது.

அறுவடை குறைந்துள்ளமையால் தேங்காய் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் மே மாதத்திற்குள் படிப்படியாக இந்த நிலை சீராகும் என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் அறுவடை குறைந்துள்ளமையால் சந்தையில் தேங்காய்க்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதனால் 70, 80 ரூபாவாக இருந்த சிறிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 100 ரூபாவை எட்டியுள்ளது.

100 ரூபா அல்லது அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 ரூபாவை தாண்டியுள்ளது. எதிர்காலத்தில் இதனையும் விட விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் என தென்னை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...