உலகில் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்தது!

Date:

றோயல் கரீபியன் கப்பல் (Royal caribbean) நிறுவனத்திற்கு சொந்தமான 20 மாடிகளை கொண்ட Icon of the Seas ஆடம்பர சொகுசு கப்பல் நேற்று (27) அமெரிக்காவின் மியாமியில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

20 மாடிகளை கொண்ட இந்த கப்பல் சுமார் 8 ஆயிரம் பயணிகள், 2 ஆயிரத்து 350 ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதுடன் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் என்ற சிறப்பும் இந்த கப்பலுக்கு உள்ளது.

திரவநிலையில் உள்ள இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் Icon of the Seas குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கப்பல்கள் காரணமாக காற்றில் மீத்தேன் வாயு கலக்கும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெப்பமயமாதல் விளைவுகளை எடுத்துக்கொண்டால் மீத்தேன், கரியமில வாயுவைக் காட்டிலும் மோசமானது என தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...