பலஸ்தீன பத்திரிகையாளரான முகமது ஆசாத் என்பவர் காசா பகுதியில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்படும் காணொளியாக மாறியுள்ளது.
இந்த வீடியோவில் 6ஆவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தனது மகளுக்கு ஒரு சிறந்த பொம்மை பரிசை வழங்கினார். அப்போது அந்த குழந்தை இந்த போர் முடிவடைந்து மீண்டும் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தனது ஆசையை கூறுகிறார்.
காசாவில் விமானக்குண்டு வீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது பிள்ளைக்கு பரிசுகொடுத்து வாழ்த்தும் இந்த தந்தையின் காணொளி தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகியுள்ளது.
அழக்கூட தெரியாத மழலைகள் மீது அணுகுண்டு விழுகின்றது, அடுத்த தலைமுறை சீரழித்து அழித்து குழந்தைகள் விழுவதை எந்த மனமும் விரும்பாது.
The Palestinian journalist Mohammed Asad celebrates his daughter’s birthday over the rubble of destroyed homes in Gaza Strip. Wish her a happy birthday ❤️ pic.twitter.com/3D6KeqixBG
— Muad M Zaki 💙🌊 (@muadmzaki) January 20, 2024