காசாவில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்கள்: இலங்கைக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர்

Date:

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக நிர்கதிக்குள்ளான இரண்டு குடும்பங்கள் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளன.

குறித்த இரண்டு குடும்பத்தினரும் இலங்கை மற்றும் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் தர் செயிட் (Zuhair Dar Zaid) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இவர்கள் அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கோரியதற்கமைய இலங்கைக்கான பலஸ்தீன் துாதுவரலாயம் அதனை ஏற்பாடு செய்திருந்தது.

கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள  பலஸ்தீன துாதுவராலயத்தில் இந்த சந்திப்பு இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு துாதுவர் டாக்டர்.சுகைர் எம்.எச்.செய்த் தலைமையில்  இடம்பெற்றது.

இரண்டு குடும்பங்களின் தாய்மார்களும் இலங்கை முஸ்லிம்கள் என தெரியவந்துள்ளது.

இதன்போது இலங்கையினை சேர்ந்த திருமதி.ரிகாசா,திருமதி.சுகைனா மற்றும் அவர்களது பிள்ளைகளான சைய்ட் அல் அப்பாஸ், ரித்தாத் முஹம்மத் ஆகியோர் செய்தியளார்களிடம் பேசினர்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் பெருமளவான மக்களைக் கொன்று குவித்த மோதலின் விளைவாக காசாவில் தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாக இலங்கையை வந்தடைந்துள்ள பலஸ்தீனக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தமக்கு கடவுச்சீட்டு இல்லை எனவும், கடவுச்சீட்டை பெறுவதற்கு இலங்கைத் தூதரகம் உதவியதாகவும் 16 வயதுடைய பலஸ்தீன சிறுவன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, குறித்த இரண்டு குடும்பங்களும் காசாவில் இருந்து வெளியேறுவதற்கு உதவிபுரிந்த இலங்கை அரசாங்கத்திற்கு பலஸ்தீன தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாகவும், இதுவரை சுமார் 23,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...