காசாவில் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Date:

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையேயான போர்நிறுத்தம் மற்றும் காசாவில் பலஸ்தீனிய குழுக்களால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை குறித்த தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வார இறுதியில் மூன்று நாடுகளின் உளவுத் தலைவர்கள் சந்திப்பை மேற்கொண்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை முதலில் விடுவிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக போர்நிறுத்ததை அமுல்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கட்டார் பிரதமர் கூறியுள்ளார்.

இதேநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்நிபந்தனையாக நிரந்தர போர் நிறுத்தத்தை ஹமாஸ் கோரியதாகவும் கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...